உண்மை சரிபார்ப்பு: லாவோசு நாட்டு அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலையின் காணொளி தவறான தகவலுடன் பகிரப்படுகிறது

உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை மேகாங் நதியில் இருந்து அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக பரவும் காணொளி, தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதாக தவறான தகவலுடன் பரவுகிறது

Update: 2025-01-27 07:20 GMT


லாவோசு நாட்டில் புத்தமதம் மிகப்பெரிய மதமாகும். கிட்டதட்ட மக்கள்தொகையில் 65 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் புத்த மதத்தினை பின்பற்றுகிறார்கள். இவர்கள் பெரும்பான்மையானவர்கள் தேரவாத புத்தமதத்தை பின்பற்றுகின்றனர். இது புத்தமதத்தின் பிரதான கிளைகளில் ஒன்றாகும். ஒரு பழமையான கதையின் படி, தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசிற்கும் புத்தமதத்துடன் உள்ள தொடர்பு கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோக மன்னர் காலத்தில் தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்திய கலாச்சாரத்தின் தாக்கம் லாவோசின் கலை மற்றும் கலாச்சாரத்தில் ஆழமாகவே இருந்துள்ளது. குறிப்பாக, இந்து மற்றும் புத்தமத சின்னங்கள் (iconography) இந்த நாட்டின் கலை வடிவங்களில் பிரதிபலிக்கப்படுகின்றன.

2024 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் லாவோசு நாட்டிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, கடம்பமர நிறத்தில் பொறிக்கப்பட்ட புத்தர் தலை ஒன்றினை லாவோசின் பிரதமர் சோனெக்சே சிபான்டோனே அவர்களுக்கு பரிசளித்தார். அதே சந்திப்பில் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட பழமையான பித்தளையினால் செய்யப்பட்ட புத்தர் சிலையினையும், லாவோசின் அதிபர் தோங்லுன் சிசௌலித் அவர்களுக்கு வழங்கினார்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் , சமூக வலைதளங்களில் ஒரு காணொளி பரவி வருகிறது. அந்த பதிவிலுள்ள கட்சியில், தமிழ்நாட்டின் ஒரு நதியின் அருகே அகழ்வாராய்ச்சியின் போது ஒரு அழகான புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவை பகிர்ந்த Facebook பயனர், “खुद का खुद से” என்ற பெயரில், “जहां खोदोगे बुद्ध ही निकलेंगे क्योंकि ये बुद्ध की धरती है अवतारों की नहीं।” என்று எழுதியுள்ளார். இதை தமிழில் மொழிபெயர்த்தால், "நீங்கள் எங்கு தோண்டினாலும், புத்தரின் சிலை தான் கிடைக்கும், ஏனெனில் இது புத்தரின் நிலம்; அவதாரங்களின் நிலம் அல்ல" எனப் பொருள்.

இவ்வாறு வெகுவாக பகிரப்பட்ட பதிவின் இணைப்பு இங்கே மற்றும் காப்பக இணைப்பு இங்கே.
பரப்பப்பட்ட பதிவின் குற்றச்சாட்டு குறித்து பகிரப்பட்ட தரவுபடம்:


உண்மைச் சரிப்பார்ப்பு:

இந்த தகவலாய்வின் போது அந்த காணொளியில் உள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை. தமிழ்நாட்டில் புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என தெரியவந்துள்ளது.

இந்த காணொளியின் முக்கிய காட்சிகளை InVid tool மூலம் பிரித்தெடுத்து, புகைப்படமாக எடுத்து Google Reverse Image Search மூலம் தேடியபோது, ஒரு முகநூல் இணைப்பை கண்டுபிடித்தோம். அதில், புத்தர் சிலை தாய்லாந்து-லாவோசு எல்லை அருகிலுள்ள மேகாங் நதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபோது கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இது Mueang Ton Phueng என்ற இடத்தில், Chiang Rai மாநிலத்தில் உள்ள Chiang Saen மாவட்டத்திற்கு அருகில் இருக்கிறது.

Full View
இதன் அடிப்படையில், நாங்கள் YouTube-ல் தேடினோம். அங்கு, லாவோசின் ஒரு நதியில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலையைப் பற்றிய தகவல் அடங்கிய மேலும் சில காணொளிகளாய் பார்க்க முடிந்தது. LNTV English சேனலில் 2024 ஆம் ஆண்டு ,மே 19 -அன்று வெளியிடப்பட்ட காணொளியில், “குறைந்தது இரண்டு மீட்டர் உயரமுள்ள புத்தர் சிலை Bokeo மாவட்டத்தில் உள்ள Tonpheung பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பகுதியின் பண்டைய கலைப்பொருட்கள் தேடுதலின் போது கிடைத்ததில் இச்சிலையே மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
Full View
மேலும், Laotian Times நாளிதழில் வெளியான செய்தியில், “புத்தர் சிலையின் கண்டுபிடிப்பு மேகாங் நதிக்கரையிலுள்ள நாடுகளில், குறிப்பாக லாவோசு, தாய்லாந்து மற்றும் கம்போடியாவில் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது. இது போகியோ(Bokeo) மாவட்டத்திலுள்ள Tonpheung பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதன் உண்மைத்தன்மை மற்றும் சொந்த உரிமைக்கான விவாதங்கள் பரவி வருவதாகவும்” குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, தமிழ்நாட்டில் லாவோசு என்ற பெயருள்ள எந்த நதியோ அல்லது இடமோ இல்லை என்பதை உறுதிப்படுத்தினோம். மேலும், ஊடகச் செய்திகள் மற்றும் தொல்லியல் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன, புத்தர் சிலை லாவோசு நாட்டின் Bokeo மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, பரப்பப்பட்ட காணொளியில் வெளியான குற்றச்சாட்டு தவறானதாகவும் வழிதவறச் செய்யும் தகவலாகவும் இருக்கிறது.

Claim :  தமிழ்நாட்டின் லாவோசு அகழ்வாராய்ச்சி செய்து புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News