பிரதமர் மோடி வெளிநாட்டில் பிரியாணி சாப்பிட்டாரா? - உண்மை இதுதான்

பிரதமர் மோடி அசைவ உணவான பிரியாணி சாப்பிட்டதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது. தவறான தகவலுடன் பரவி வருகிறது.

Update: 2025-07-10 06:27 GMT

பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கு 8 நாட்கள் சுற்றுப் பயணமாக கடந்த ஜூலை 2ஆம் தேதி புறப்பட்டார். கானா, ட்ரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளில் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அதன் ஒருபகுதியாக ஜூலை 3ஆம் தேதி ட்ரினிடாட் & டோபாகோ நாடுகளுக்கு சென்றார். டிரினிடாட் & டொபாகோ நாட்டின் பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் மத்தியில் உரையாற்றினார்.

தொடர்ந்து, நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருதான “தி ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட் & டொபாகோ” என்ற விருதை பிரதமர் கம்லா பெர்சாத் பிஸ்ஸேசர் வழங்கினார். மேலும் அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டும் பிரதமர் பேசினார். முன்னதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசர் நடத்திய இரவு விருந்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

பரவும் தகவல்

இந்த நிலையில் டிரினிடாட் பிரதமர் வைத்த விருந்தில் பிரதமர் மோடி அசைவ உணவான பிரியாணி சாப்பிட்டதாக ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் பிரதமர் மோடி தட்டில் பிரியாணி, சிக்கன் மற்றும் முட்டை உள்ளிட்ட அசைவ உணவுகள் இருக்கிறது. பிரதமர் மோடியின் சைவ உணவு பழக்கத்தை கேள்விக்குட்படுத்தும் விதமாகவும் இந்த புகைப்படம் இருந்தது.

இதனைப் பகிர்ந்த Thanos_Pandit என்ற எக்ஸ் பயனர், “மன் கீ பிரியாணி” என்று பகடியாக குறிப்பிட்டு இருந்தார். அதாவது, மன் கீ பாரத் என்ற தலைப்பில் மோடி உரையாற்றி வரும் நிலையில், அவர் பிரியாணி சாப்பிடுவதாக கிண்டல் செய்யும் தொணியில் இந்த பதிவு இருந்தது.

Archive 

Sachin என்ற எக்ஸ் பயனர், “மோடிஜி ஒரு சைவ உணவு உண்பவர், பிறகு ஏன் இந்த அசைவ பிரியாணி?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

Archive 

Nidhi Singh Rathore என்பவரும் இலையில் பிரியாணி உள்ளது இல்லையா என்ற கேள்வியுடன் புகைப்படட்தை பகிர்ந்திருந்தார்.


உண்மை சரிபார்ப்பு

வைரல் புகைப்படத்தின் நம்பகத்தன்மை தொடர்பாக TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய விசாரணையில், அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்தது.

முதலில் வைரல் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தியபோது நமக்கு இந்தியா டுடே, நியூஸ் 18, டெக்கான் ஹெரால்டு இணையதளங்களில் வெளியிட்ட சில செய்தி அறிக்கைகள் கிடைத்தன. இந்த செய்திகளில் குறிப்பாக பிரதமர் மோடி சாப்பிடும் இலை குறித்த தகவல்கள்தான் பிரதானமாக இருந்ததே தவிர அவர் பிரியாணி சாப்பிட்டார் என்று எந்த தகவலும் இல்லை.


அதாவது, இந்துக்கள் பாரம்பரியம் மிக்க சோஹரி இலையில் உணவு பரிமாறப்பட்டதாக அந்த செய்திக் குறிப்புகள் தெரிவித்தன. எனினும் வைரல் புகைப்படத்திலும் செய்திகளில் இருக்கும் புகைப்படத்திற்கும் சில வித்தியாசங்கள் இருப்பதையும் கண்டறிந்தோம்.


இதனையடுத்து நமது தேடலில் பிரதமர் மோடி, ட்ரினிடாட் இரவு விருந்து புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதைக் கண்டறிந்தோம். அதில் பிரதமர் மோடி சாப்பிடும் இரண்டு புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றை கூர்ந்து ஆய்வு செய்தபோது அது பிரியாணி வகை உணவு இல்லை என்பதை உறுதி செய்தோம். மேலும், சைவ உணவு மற்றும் காய்கறிகள் கூட்டு ஆகியவை அதில் இருப்பதையும் கண்டோம்.

பிரதமர் மோடி இரவு விருந்தின் மெனு தொடர்பாக ஆங்கில கீ வேர்டுகள் துணையுடன் கூகுளில் தேடினோம். அதில், ட்ரினிடாட் நாட்டைச் சேர்ந்த Trinidad express இணையதளம் வெளியிட்ட செய்தி நமக்கு கிடைத்தது.

அதில், “பிரதமர் மோடி ஒரு தீவிர சைவ உணவு பிரியர். அவர் இந்திய தூதரகத்திடம் டிரினிடாட் மற்றும் டொபாகோ உணவை, குறிப்பாக உள்ளூர் இந்திய சைவ உணவுகளை சிறிது ருசிக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தார். அவருக்கான விருந்து சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக சோஹரி இலையில் உள்ளூர் இந்திய உணவுகளை ருசிக்க ஏற்பாடு செய்தோம்.


கர்ரி சாட்டைன் (curried chataigne), மாம்பழ டால்காரி, சன்னா மற்றும் ஆலு, பூசணிக் காய் கூட்டு ஆகியவை அதில் இடம்பெற்றன இருந்தது. மேலும் அவர் பைகன் (கத்தரிக்காய்) சோக்காவும், கொஞ்சம் பன்னீரும் சாப்பிட்டார். அனைத்தையும் இரண்டு முறை கேட்டுச் சாப்பிட்டார் என்று உணவு விருந்தினை ஏற்பாடு செய்தவர் குறிப்பிட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மோடி அசைவ உணவு சாப்பிட்டதாக செய்தியின் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதை TeluguPost உறுதி செய்தத

இந்த ஆதாரங்கள் மூலமாக பிரதமர் மோடி சைவ உணவு சாப்பிடும் புகைப்படத்தில், பிரியாணி இருப்பது போல எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முடிவு

பிரதமர் மோடி ட்ரினிடாட் டெபாக்கோ நாட்டில் பிரியாணி சாப்பிட்டதாக பரவும் புகைப்படம் தவறானது. உண்மையில் அவர் சைவ உணவுகளையே சாப்பிட்டுள்ளார் என்பது தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  பிரதமர் மோடி வெளிநாட்டில் பிரியாணி சாப்பிட்டதாக பரவும் புகைப்படம்
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News