உண்மை சரிபார்ப்பு: பெரியார் ஆதரவாளர்கள் பெரியாரின் படத்தை செருப்பால் தாக்கி அவமதித்ததாக பரவும் தகவல்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு முன்பு சமூக ஊடகங்களில், பெரியார் ஆதரவாளர்கள் அவரின் உருவப்படத்தினை செருப்பால் தாக்கி அவமதித்தாக சித்தரிக்கப்பட்ட படம் ஒன்று பரவியது

Update: 2025-01-27 06:15 GMT

நாம் தமிழர் கட்சி (NTK) தலைமை ஒருங்கிணைப்பாளர் செபாஸ்டியன் சைமன் , பலராலும் சீமான் என்று அழைக்கப்பெறும் இவர். திராவிட கருத்தியல், தந்தை பெரியார் குறித்தும் வெளியிட்ட சர்ச்சைக்குறிய கருத்துகளால் பெரியாரிய கொள்கை ஆதரவாளர்களிடம் மத்தியில் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளார். மேலும் இதன் விளைவாக சீமான் வெளியிட்ட பெரியார் எதிர்ப்பு கருத்துகள் காரணமாக அதிருப்தியடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வமாக திராவிட முன்னேற்றக் கழகம் (DMK)-இல் இணைந்துள்ளனர்.

அதற்கு முன்னதாக, தந்தை பெரியார் திராவிடர் கழகம் (TPDK) மற்றும் மே 17 இயக்கம் உட்பட பல அமைப்புகளை சேர்ந்த போராளிகள், நீலங்கரையிலுள்ள சீமான் வீட்டினை முற்றுகையிட ஒன்றுகூடியுள்ளனர்.அவர்கள் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். ஆனால், சென்னை காவல்துறையினர் தலையிட்டு போராட்டக்காரர்களை தடுத்து அவர்களை கைது செய்துள்ளனர்.

சீமானுக்கு எதிராக நடைபெற்ற இந்த போராட்டங்களை தொடர்ந்து, தந்தை பெரியார் போன்ற திராவிட சிந்தனையாளரின் உருவப்படத்தை மரியாதையின்றி செருப்பால் அடிப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதனை சிலர் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் தங்கள் சொந்தக் கட்சியின் அடையாளத்தை அவமதித்துள்ளனர் என்ற கருத்தினை பதிவிட்டுள்ளனர்.

தெலுங்குப்போஸ்ட் வாசகர்கள் பார்க்க சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த புகைப்படத்தின் இணைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன



உண்மை சரிப்பார்ப்பு:

இந்த புகைப்படத்தின் உண்மை தன்மை குறித்து Telugupost தகவலாய்வு குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் போது, DMK ஆதரவாளர்கள் பெரியாரின் படத்தினை அவமதித்ததினர் என பரவும் செய்தி ஒரு தவறான தகவல் என்று கண்டறியப்பட்டது. அது முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்ட படம் என உறுதியாகியுள்ளது.

இந்த செய்தி தொடர்பாக அனைத்து தகவல்களையும் சோதனை செய்யும் வகையில், Google Search வழியாக பரவலான தேடல் ஒன்றை மேற்கொண்டோம். இதன் மூலம், சென்னை, நீலாங்கரை பகுதியில் நாம் தமிழர் கட்சி தலைவரான சீமான் வீட்டுக்கு வெளியே திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்கள் நடத்திய போராட்டங்கள் தொடர்பான காணொளிகளை கண்டறிந்தோம். இதனை Sun News தொலைகாட்சி வெளியிட்டிருந்தது. அந்த செய்தித் தொகுப்பில் திராவிட கொள்கை ஆதரவாளர்கள் சீமான் உருவப்படம் அடங்கிய பதாகைகளை தாக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. 

மேலும், Google Reverse Image Search வழியாக தேடலை மேற்கொண்டபோது, அதே புகைப்படத்தில் சீமான் இருப்பது போன்றும், சிலர் அதனை பெரியாரின் புகைப்படத்துடன் மாற்றம் செய்யப்பட்டதாகவும் கண்டறியப்பட்டது. இதனை சில X பயனாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நாம் தொடர்ந்த தேடலில், சீமான் வீட்டின் முன்பாக பெரியார் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட போராட்டத்தை பற்றிய காணொளி Oneindia Tamil-ல் வெளியாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
Full View

அந்தக் காணொளியில், போராளிகள் சீமான் படத்திற்கு செருப்பு, ஜோடி மாலை அணிவித்து, அவற்றை செருப்பு மற்றும் துடைப்பத்தால் தாக்கும் காட்சிகள் தெளிவாக காணப்பட்டன.

இங்கே, அந்த வெகுவாக பரப்பப்படும் பதிவில் உள்ள முதன்மைப் படம் மற்றும் மாற்றிய படத்தின் ஒப்பீடு வழங்கப்பட்டுள்ளது.


தகவலாய்வு மற்றும் ஊடக அறிக்கைகள் மூலம், திராவிட முன்னேற்றக் கழகம் ஒருங்கிணைத்தப் போராட்டத்தின் போது தந்தை பெரியார் உருவப்படம் தாக்கப்படவில்லை என்பது உறுதியாகிறது. போராட்டம் சீமான் மீது, அவர் வெளியிட்ட பெரியார் எதிர்ப்பு கருத்துக்களுக்கு எதிரானது. போராட்டக் காரர்கள் சீமான் போஸ்டர்களுக்கு செருப்புமாலை அணிவித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினர். எனவே, இவ்வாறன பதிவில் கூறப்பட்டதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானது.

Claim :  பெரியார் ஆதரவாளர்களே அவரது உருவப்படத்தை செருப்பால் தாக்கி அவமதித்தாக ஒரு காணொளியில் பதிவேற்றப்பட்டிருந்தது
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News