உண்மை சரிபார்ப்பு: சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனை ‘தம்பி’ என்று அழைத்தாரா? உண்மை என்ன?

தமிழ்நாடு சட்டமன்ற தலைவர் அப்பாவு, அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனை தனது தம்பி என்று குறிப்பிட்டதாக ஒரு சமூக ஊடக பதிவு பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

Update: 2025-01-30 04:55 GMT

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் எம். அப்பாவு, பீகாரின் தலைநகரான பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்திலிருந்து வெளியேறினார். மாநில ஆளுநர் ஆர். என். ரவியை விமர்சித்ததற்கு, ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஸ் நாராயண் சிங் எதிர்ப்பு தெரிவித்ததன் பின்னரே, அவர் கூட்டத்தை விட்டு வெளியேறினார்.

பீஹாரில் நடைபெற்ற 85-வது அகில இந்திய சட்டமன்ற தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட அப்பாவு, தமிழ்நாடு ஆளுநர் சட்டமன்றத்தையும் மாநிலத்தையும் அவமதிக்கிறார் எனக் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த துணைத்தலைவர், அப்பாவுவின் கருத்துகள் மாநாட்டின் அதிகாரப்பூர்வ குறிப்பு பதிவில் இடம்பெறாது என்று அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் வெளியீட்டில், மாநில ஆளுநர்கள் தங்களது வரையறுக்கப்பட்ட அதிகாரத்தை மீறி மாநில நிர்வாகத்தில் தலையிடுவதாகவும், இது அரசியலமைப்பு கோட்பாடுகளுக்கு முரணானது என்றும், சட்டப்பேரவைத் தலைவர் இச்சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, "ஞானசேகரன் என் தம்பி" என்று கூறியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. குறிப்பிடத்தக்கது என்னவென்றால், ஞானசேகரன் என்பது அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரின் பெயர்.

சமூக ஊடகங்களில் @SaffronTwitz என்ற கணக்கு இதைப் பற்றி இவ்வாறு பதிவிட்டுள்ளது:

"என் தம்பி ஞானசேகரன் வழக்கு"
"பாலியல் குற்றவாளியை சபாநாயகர் பேச்சா இது? இதுக்கு மேல ஒரு கேடுகெட்ட ஆட்சிய பார்க்க முடியாது"

வெகுவாக பரவும் காணொளியில், சபாநாயகர் அப்பாவு கூறியதாக கூறப்படும் கருத்து: “சென்னை உயர்நீதிமன்றம், என் தம்பி ஞானசேகரன் தொடர்பான வழக்கை விசாரணை செய்ய, மூன்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளை நியமித்துள்ளது.”

வைரல் பதிவுக்கான இணைப்பு இங்கே

இதுகுறித்த பதிவின் திரைபடம்

உண்மை சரிபார்ப்பு:

இது தொடர்பாக , தெலுங்கு போஸ்ட் தகவலாய்வு குழு மேற்கொண்ட உண்மைச் சரிபார்ப்பின்போது, அப்பாவு பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை ‘தம்பி’ என்று அழைத்ததாக கூறப்படும் தகவல் பொய்யானது என கண்டு அறியப்பட்டுள்ளது.

கூகுள் தேடல் மற்றும் கூகுள் புகைப்படத் தேடல் (Google Reverse Image Search) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், CommuneMag செய்தி நிறுவனத்தின் ஒரு அறிக்கையில், ஜனவரி 10, 2025 அன்று சென்னை நகரில் நடந்த "இந்தியா வென்றது" நூல் வெளியீட்டு விழாவில் அப்பாவு இந்த கருத்துகளை தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டது.

மேலும், YouTube-ல் தேடியபோது, புதிய தலைமுறை தொலைக்காட்சி சேனலில் வெளியிடப்பட்ட அப்பாவுவின் முழுமையான உரை காணக்கிடைத்தது.

Full View

அந்த நிகழ்வின் போது சபாநாயகர் கூறியதை கேட்கலாம். அந்நிகழ்வு 10:53க்கு தொடங்கி உள்ளது.

சரியாக 37:50க்கு, அப்பாவு மேடையை விட்டு வெளியேறுவதைக் காணலாம். அதன் பிறகு, பத்திரிகையாளர் இந்திரகுமார் தெரடி மைக்கைப் பிடித்து, சபாநாயகர் தனது தம்பி என்று யாரை குறிப்பிட்டார் என்பதைக் விளக்குகிறார்.

Full View

நாங்கள் தொடர்ந்தும் தேடியபோது, புதியதலைமுறை செய்தித் தளத்தில், சபாநாயகர் அப்பாவு தனது பேச்சு அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய பின்னர் வழங்கிய விளக்கத்தை காண முடிந்தது.

"நான் சாதாரணமாக கூறியதை மிகைப்படுத்துகிறார்கள். நான் பங்கேற்ற ஒரு நிகழ்வில் ஞானசேகரன் என்ற ஒருவர் எனக்கு மேல் சால்வை அணிவித்தார். அவரது பெயரை கேட்டதன் அடிப்படையில் அவரை வைத்து வேடிக்கையாகச் சர்ச்சை உருவாக்கியுள்ளனர்," என்று அப்பாவு கூறியதாக புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் பிறகு, "இந்தியா வொன்" என்ற புத்தகத்தை எழுதிய நிரஞ்சன் குமார் என்பவரின் X கணக்கில் தேடினோம். ஜனவரி 21, 2025 அன்று அவர் பதிவு செய்திருந்தார். அதில், "சட்டப் பேரவை தலைவர், குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனை அவர் தனது தம்பி என்று குறிப்பிடவில்லை, மாறாக நிகழ்வில் இருந்த ஒரு சாதாரண மனிதரை தான் குறிப்பிட்டுள்ளார்" என்று விளக்கி பதிவிட்டுள்ளார்.

மேலும் அதில் முக்கியமாக, ஜனவரி 8 அன்று மாநில சட்டமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பான பாலியல் துன்புறுத்தல் வழக்கின் விவாதத்தின் போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், "அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒரு திமுக உறுப்பினர் இல்லை என்று உறுதியாக கூறுகிறேன். ஆனால், அவர் திமுக ஆதரவாளர் என்பதை மறுக்கமாட்டோம்," என்று கூறியிருந்தார்.

அதனை தொடர்ந்து முழுமையான காணொளியினை பார்த்த பிறகு, புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றவர்களும் பேச்சாளரும் வழங்கிய விளக்கத்தைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, அப்பாவு அவர்கள், அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரனை குறிப்பிடவில்லை என்பதும், மாறாக நிகழ்வில் இருந்த ஒருவரை தான் அவர் குறிப்பிட்டார் என்பதும் தெளிவாகிறது. ஆகவே, வைரலாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது.

Claim :  அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரனை அப்பாவு தனது தம்பி எனக் கூறியுள்ளார்
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News