உண்மை சரிபார்ப்பு: பாகிஸ்தான் நபர் தனது சொந்த சகோதரியை திருமணம் செய்யவில்லை!
பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது சொந்த ரத்த சகோதரியை திருமணம் செய்து கொண்டதாக கூறி புதிதாக திருமணமான தம்பதியினரைக் காட்டும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சாதாரணமாக, சில முஸ்லிம் குடும்பங்களில் இரு மகன்களின் திருமண விழாக்களை ஒன்றாக நடத்துவது வழக்கமாக உள்ளது. ஆனால் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் ஒரு இசுலாமிய குடும்பம் தங்கள் பிள்ளைகளின் திருமணத்தை வித்தியாசமாக நிகழ்த்தியுள்ளது என Khaama Press பத்திரிகையை குறிப்பிட்டு ‘பிசினஸ் டுடே’ செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் என்ன சிறப்பு என்றால், ஆறு சகோதரர்கள், வேறொரு வீட்டின் ஆறு சகோதரிகளை மணந்துள்ளனர். இது குறித்து பேசியிருக்கும் சகோதரர் ஒருவர், ‘எங்களில் தம்பிக்கு 18 வயது வரும் வரை காத்திருந்தோம். திருமண வயது வந்தவுடன் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்டோம். இஸ்லாமிய வழக்கப்படி, தங்கள் திருமணம் எளிய முறையில் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். நினைத்தது போலவே அனைத்தும் சிறப்பாக நடந்தது,” என்று கூறியிருக்கிறார்.
ஒரு பக்கம் இப்படி சிறப்பான செய்திகள் வலம் வந்துகொண்டிருக்கும் வேளையில், சமூக வலைதளங்களில், “ஒரு பாகிஸ்தானியர் தனது சொந்த சகோதரியுடன் திருமணம் செய்துகொண்டார்” என கூறி, புதிய தம்பதியரை காட்டும் ஒரு படம் வைரலாகப் பகிரப்படுகிறது. ARY நியூஸ் இலச்சினை கொண்ட ஒரு படத்தில், புதிய தம்பதியரை காட்டும் படம் “இஸ்லாத்தின் இன்னொரு புதையல்! ஒரு பாகிஸ்தானியர் தனது சொந்த சகோதரியுடன் திருமணம் செய்து கொண்டு, 'நம்முடைய மதத்தில் இதெல்லாம் சகஜம்' இது தான் உண்மையான ‘Mauj-HUB’!" எனப் பதிவிட்டுள்ளார்.
உண்மைத் சரிபார்ப்பு:
இந்த தகவல் பொய்யானது என்பதை Telugu Post Fact Check குழு கண்டறிந்தது.
முதற்கட்டமாக பகிரப்படும் படத்தில் இருக்கும் ARY நியூஸ் என்று போடப்பட்டிருக்கும் இலச்சினை (Logo) உண்மையா என்று தேடினோம். ARY நியூஸ் சேனலின் சமூக ஊடகப் பக்கங்களை ஆராய்ந்தபோது, அவர்கள் வித்தியாசமான கிராஃபிக்ஸ் வடிவமைப்புகளைப் பயன்படுத்துவதை கண்டறிந்தோம். வைரலாகும் படத்தில் இருக்கும் இலச்சினை அமைப்பிற்கும், உண்மையான ARY நியூஸ் இலச்சினைக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் இருந்தன.
அசலான மற்றும் வைரலான கிராஃபிக்ஸ் படங்களின் ஒப்பீட்டுப் படம் இணைக்கப்பட்டுள்ளது
கூகுள் லென்ஸ் மற்றும் பிற திருமண வரன் தேடும் தளங்களை தணிக்கை செய்வது என முடிவெடுத்தோம். பரவிவரும் புகைப்படத்தை கூகுள் லென்ஸ் வாயிலாகத் தேடியபோது, பாகிஸ்தானிய திருமண தளமான Zawaj Marriage Bureau-வில் இந்த புகைப்படம் உள்ளதைக் கண்டோம். இதில் போலியான பதிவுடன் பகிரப்பட்டு வரும் புகைப்படத்திலுள்ள தம்பதியரின் படங்களை காண முடிந்தது.
அடுத்ததாக இந்த திருமணம் அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்றதை உறுதி செய்தோம். கூகுள் ரிவர்ஸ் தேடலின் போது Tara Arseven Photography தளத்தில் 2021 ஏப்ரலில் டெக்சாஸ், பிரிஸ்கோவில் நடைபெற்ற ஒரு பாகிஸ்தானிய திருமணத்தின் புகைப்படங்களை கண்டோம். ஃபேஸ்புக் மற்றும் Brides of North Texas தளங்களில் இந்த திருமணம் குறித்த முழு தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
மேற்கொண்ட உண்மை கண்டறியும் சோதனை முடிவில், அந்த புகைப்படம் தம்பதியர் தான் என்பதும், அவர்கள் ஒரே வீட்டிலுள்ள ரத்த பந்தங்கள் இல்லை என்பதும் புலப்பட்டது. தொடர்ந்து, வைரல் பதிவில் இடம்பெற்ற Budbak எனும் பேஸ்புக் கணக்கை ஆராய முற்பட்டபோது, அந்தப் பதிவு நீக்கப்பட்டதாக தெரிந்தது. ஏனென்றால், அப்படி ஒரு பதிவே அவர்கள் முகநூல் பக்கத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை.
அரசியலாக்கப்பட்ட இந்த செய்தி முழுமையாக பொய்யானது. வைரலான புகைப்படத்திலுள்ள மணமகன் மற்றும் மணமகள் இருவரும் ஒரே குடும்பத்தினர் அல்ல. அவர்கள் வெவ்வேறு பாகிஸ்தானிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை மேற்கொண்ட தணிக்கையின் வாயிலாக Telugu Post Fact Check உறுதி செய்துள்ளது. ஆகவே, “சொந்த சகோதரியுடன் திருமணம்” செய்ததாக கூறும் தகவல் முற்றிலும் தவறானது. செய்திகளை பகிரும் முன் சமூக அக்கறையுடன் செயல்பட Telugu Post உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.
Claim : பாகிஸ்தானை சேர்ந்த நபர் தனது சொந்த சகோதரியை கல்யாணம் செய்து கொண்டார். அவர்கள் மதத்தில் இதெல்லாம் சாதாரணம்.
Claimed By : Social Media Users
Fact Check : Unknown