சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மறைவு என்பது வெறும் வதந்தி! நலமுடன் இருக்கிறார் ரஜினி!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மரணமடைந்தார். அவரது உடல் சென்னை வருகை என பரவும் தகவல்

Update: 2025-05-31 08:27 GMT


Fact Check : ரஜினி மறைவு குறித்து எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. அவர் நலமுடன் இருக்கிறார். இது ஒரு பொய்யான தகவல்

தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் ஒரு செய்தி பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. குறிப்பாக திரைப்பட பிரியர்களையும் ரசிகர்களையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. அது என்னவென்றால் “நடிகர் ரஜினிகாந்த் காலமானார்” என்ற தலைப்புடன் பலர் பகிர்ந்து வரும் இந்த செய்தி உண்மையா? சமூக ஊடகங்கள் வழியாக மிகக் குறைந்த நேரத்தில் தகவல்கள் வேகமாக பரவிவரும் இந்த இணைய உலகத்தில், தவறான செய்திகளை வதந்திகளை எளிமையாக நம்பப்படுவதால் சமூகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதுபோன்ற மக்களை குழப்பும் ஒரு வதந்தி தான் நடிகர் ரஜினிகாந்த் பற்றிய துயர்ச் செய்தி.

தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கலால் அன்போடு அழைக்கப்படும் ரஜினிகாந்த் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் நடிகர் ஆவார். குறிப்பாக, 1970, 80 களில் இருந்த திரையுலக ரசிகர்கள் தொடங்கி, இன்றைய 2k கிட்ஸ் வரையிலும் அனைவரின் நெஞ்சத்திலும் நீங்காத இடத்தை வைத்திருப்பவர். தமிழக அரசியலிலும் மக்களால் வரவேற்கப்பட்டவர். பிரபலங்களாக இருப்பதினால் தங்கள் சுய வாழ்க்கை, குடும்ப உறுப்பினர்களாகும் அடிக்கடி பல வதந்திகளுக்கு சமூக வலைதளங்களில் பதில் சொல்லவேண்டிய நிலை வருகிறது. இதுபோன்ற அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் மனவுளைச்சலை ஏற்படுத்தலாம்.


மேல் குறிப்பிட்ட நடிகர் ரஜினிகாந்த் பற்றிய வதந்தி Facebook மற்றும் WhatsApp போன்ற தளங்களில் பரவியது. குறிப்பாக, இந்த முகநூல் குழுவில், "ரஜினிகாந்த் மரணம்" என்ற செய்தியுடன், ஒரு புகைப்படம் அடங்கியப் பதிவு வெளியிடப்பட்டது. இது உண்மை என நம்பிய ரசிகர்கள் சிலர் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்ததோடு, அவர் ஆத்மா அமைதிக்கொல்லட்டும் என உருக்கமாக கருத்துகளும் தெரிவித்துள்ளனர்.




படத்துடன் சேர்த்து, சிலர் "ஒரு பெரும் நஷ்டம்", "நமது தலைவர் இல்லாமல் போனார்" என கூட பதிவுகள் எழுதியுள்ளனர். இதனால் அவருடைய ரசிகர்கள் மத்தியில் குழப்பமும் வேதனையும் ஏற்படத் தொடங்கியது.




உண்மைச் சரிபார்ப்பு :

இந்த வைரல் பதிவினை தெலுங்கு போஸ்ட் உண்மைச் சரிப்பார்ப்பு குழு ஆய்வு செய்தது. முதலில் செய்தியின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுள் தேடல் மேற்கொள்ளப்பட்டது. பின்பு பதிவிடப்பட்ட புகைப்படங்களை Google Reverse Image Search மூலம் கூகுளில் ஆராய்ந்தோம். அப்போது வேறு எந்த செய்தி ஊடகமும் ரஜினிகாந்த் காலமானார் என்று செய்தி வெளியிடவில்லை. அவ்வாறான காணொளி பதிவுகளும் எதும் கிடைக்கவில்லை.

முகநூலில் பகிரப்பட்ட புகைப்படத்தில் இருந்த வாசகங்களை Google Lens கொண்டு அலசிப் பார்த்ததில், அதில் நடிகர் ரஜினிகாந்த் தொடர்புடைய எந்த செய்தியும் இடம்பெறவில்லை.

மேலும், ரஜினிகாந்தின் அவரது அதிகாரப்பூர்வ X ஊடகக் (முன்னாள் Twitter) கணக்கிலும் இது தொடர்பான எந்த தகவலும் பதிவிடவில்லை. மாற்றாக நடிகர் ரஜினிகாந்தின் நண்பரும் பழம்பெரும் நடிகருமான ரஜேஷ் கடந்த மே 29 அன்று இயற்கை எய்தினார். அவர் தனது நண்பரின் இழப்பினைக் குறித்து தனது X-பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.




இதனைத் தொடர்ந்து, இச்செய்தியினை முதலில் வெளியிட்டது lankatrends.blogspot.com.




 lankatrends என்ற தளத்தில் ஆராய்ந்துப் பார்த்தோம். அப்போது அது ஒரு செய்தி ஊடகம் அல்ல. ஒரு தனிநபர் அல்லது தனிப்பட்ட குழு சார்பில் இயங்கும் Blogspot தளம் என்பது தெரிய வந்தது. அதில் வைரல் செய்தி என பல பிரபலங்கள் மறைவு குறிப்பாக நடிகர் பிரபு, நடிகை கிரண் உயிரிழந்ததாக செய்திப் பகிர்ந்துள்ளதை காண முடிந்தது. எனவே இதுபோன்ற இணைய பக்கங்கள் பொதுவாக யாராலும் உருவாக்கக் கூடியவையாகும்.




 ஊடக ஒழுங்கு மற்றும் செய்திக் குழு இல்லாத சமூகப் பக்கங்கள் நம்பகமான தகவல் மூலமாக கருத முடியாது என நிரூபிக்கப்படுகிறது.

இந்த செய்தியை எந்த ஒரு நம்பகமான ஊடகமும் உறுதி செய்யவில்லை. அதேசமயம், ரஜினிகாந்த் தற்போது உடல் நலத்தோடு ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார் என்பதையும் அவரது சமீபத்திய பொது நிகழ்வுகளில் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம் உறுதியாகிறது.

முடிவு: "நடிகர் ரஜினிகாந்த் மறைந்தார்" என்பது முழுமையாக பொய்யான தகவல். உண்மையில், அவரது நண்பர் நடிகர் ரஜேஷ் தான் சமீபத்தில் உயிரிழந்துள்ளார். சமூக ஊடகப் பயனர்கள், எந்த ஒரு செய்தியையும் பகிர்வதற்கு முன் அதன் உண்மைத் தன்மையை சரிபார்த்துப் பொறுப்புணர்வுடன் தகவல்களை பகிர வேண்டும்.

Claim :  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மரணமடைந்தார். அவரது உடல் சென்னை வருகை என பரவும் தகவல்
Claimed By :  Social media users
Fact Check :  Unknown
Tags:    

Similar News