உண்மைச் சரிபார்ப்பு: சீமான் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை அவமதித்ததாக கூறப்படும் காணொளி தவறான தகவல்களுடன் பரவுகிறது

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை 'கீழ்சாதி' என்று அவமதித்தார் என கூறப்பட்டது. ஆனால் உண்மைச் சரிபார்ப்பு ‘ அவரது பேச்சு மாற்றம் செய்யப்பட்டு, ஒரு குறிப்பிட்ட கருத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது.

Update: 2025-01-24 12:28 GMT

நாம் தமிழர் கட்சி (NTK) தலைவர் செபாஸ்டியன் சைமன், பொதுவாக சீமான் என்று அழைக்கப்படும் இவர், திராவிடக் கொள்கையாளர் பெரியாரை குறித்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்ததற்காக கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளார். சமீபத்தில், பெரியாரியல் இயக்கங்களில் ஒன்றான தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அவரது வீட்டின் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நாம் தமிழர் கட்சி சீமான், பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) இணைந்து, தமிழ் தேசியம் என்னும் கொள்கையை, திராவிட அடையாளத்துக்கு எதிராக முன் வைத்து அரசியல் செய்கிறார் என்பது வலைதளத்தில் பேசப்படும் குற்றச்சாட்டு.

சமீபத்தில், முன்னாள் தெலங்கானா ஆளுநரும், அலோபதி மருத்துவருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், சென்னை ஐஐடி இயக்குநர் விஷ்ணு காமகோடி வெளியிட்ட “கோமியத்தின் மருத்துவ பயன்கள் ” குறித்த கருத்தின் மீதான சர்ச்சைக் குறித்து தன்னுடைய கருத்தினை தெரிவித்தார். சென்னையில் நுங்கம்பாக்கத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, சென்னை ஐஐடி இயக்குநரை விமர்சிக்கின்ற அரசியல் கட்சிகளின் மீது அவர் கடுமையாக எதிர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: “அவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவார்கள், ஆனால், அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கும் போதும்கூட பசுவின் கோமியத்தை மருந்தாக குடிக்க எதிர்க்கிறார்கள்” என்றார்.

மேலும் தமிழகத்தில் சர்ச்சைகள் சூடுபிடித்துள்ள நிலையில், “மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் கீழ் சாதி” என சீமான் கூறியதாகத் வெளிவரும் கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவுகின்றன. News18 தமிழ்நாடு வெளியிட்ட நாம் தமிழர் கட்சித் நிறுவனர் சீமான் வீடியோவை X தளத்தில் பகிர்ந்த ஒருவர், “மாட்டுக்கறி தின்பவன் கீழ் சாதி. - பாஜக வளர்ப்பு நா*ய் சீமான்” என்று எழுதியுள்ளார்.

வெகுவாக பகிரப்படும் பதிவின் இணைப்பு இங்கே
அதுபற்றிய பதிவின் திரைப்பதிவு குறித்த படம்


உண்மை சரிபார்ப்பு:

இந்த தகவல் ஆய்வின்போது, தெலுங்கு போஸ்ட் உண்மை கண்டறியும் குழு, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கொச்சையான கருத்துக்களை தெரிவித்தார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்று கண்டறியப் பட்டது.

‘News18 தமிழ்நாடு’ சமூக ஊடகப் பக்கத்தை நாங்கள் தேடினோம். இணையத்தில் வெகுவாக பகிரப்படும் இந்தப் பதிவு, “மாட்டுக்கறி தின்பவன் கீழ்சாதி! கோமியம் விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பதில்” என்று வருகின்றது.
இந்த வீடியோவை சன் நியூஸ் சேனலின் முகநூல் பக்கத்திலும் காண முடிகிறது.
Full View
அதோடு மட்டுமல்லாமல் இந்த வீடியோ News18 தமிழ்நாடு சேனலின் அதிகாரப்பூர்வ X தளக்கணக்கில் 2025 ஜனவரி 21 அன்று பதிவுசெய்யப்பட்டிருந்தது.

கோமியம் விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பதில்,

“இந்த பைத்தியங்களிடம் நாடும், நாட்டு மக்களும் சிக்கி கொண்டோம்.. வேறு என்ன செய்ய முடியும்?.. மாட்டுப்பால் குடிப்பவன் இடைசாதி, மாட்டுக்கறி தின்பவன் கீழ்சாதி, மாட்டு மூத்திரம் குடிப்பவன் உயர்சாதி.. இதுதான் இந்த நாட்டின் கட்டமைப்பு.. இந்தியாவில்தான் நெய் எரிக்கப்படுகின்றது, பால் கீழே கொட்டப்படுகின்றது, மூத்திரம் குடிக்கப்படுகின்றது. இந்த நாட்டில் நீ சிக்கி கொண்டாய், நானும் சிக்கிக்கொண்டேன்”. என கூறியுள்ளார்.

அதன்பிறகு, மூல காணொளி மற்றும் பரவிய காணொளியையும் ஒப்பிட்டு பார்த்தபோது, அப்போது அவை எடிட் செய்து, சீமான் சொன்ன கருத்துகளை தவறாகப் பரப்ப முயற்சித்திருப்பது தெரியவந்தது.
இதன் மூலம், சீமான் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை அவமதிக்கும் கருத்துகளை வெளியிடவில்லை என்பதும் விளங்குகிறது. எனவே, சீமான் கருத்துக்கு என்று வரும் குற்றச்சாட்டுகள் தவறானவை.
Claim :  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை ‘கீழ்சாதி’ என்று அவமதித்தார்
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News