ஆவின் பால்பாக்கெட்டில் வந்தது திமுகவின் விளம்பரமா? உண்மை என்ன?

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் பற்றிய ஆவின் விளம்பரம் என்பது தமிழக அரசின் நலத்திட்ட முகாம் குறித்த தகவல் மட்டுமே. அது திமுக கட்சியின் விளம்பரம் என்பது ஒரு வதந்தி ஆகும்.

Update: 2025-07-31 08:11 GMT


Factcheck : : தமிழக அரசின் நலத்திட்ட முகாம் குறித்த தகவலை திமுக கட்சியின் அரசியல் விளம்பரம் என்று அரசியல் உள்நோக்கத்துடன் மக்களை குழப்பும் வகையில் சித்தரிக்கப்பட்ட ஒரு வதந்தியாகும்.


தமிழ்நாடு அரசு துறை சேவை, திட்டங்களை, வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜீலை 15 ஆம் தேதி அன்று கடலூரில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் குறித்த விவரங்களை மக்களிடம் கொண்டுச்செல்ல அரசு சார்பில் பல விளம்பரங்கள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றது.

அதன் ஒருபகுதியாக, ஆவின் பால் பாக்கெட் மேல் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் பற்றிய செய்தி அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இதனை பலரும் தமிழக அரசின் தகவல் வெளியீடாக கருதாமல் திமுக கட்சியின் அரசியல் விளம்பரம் என்று வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்பிவருகின்றனர்.

சமூக ஊடக பயனாளர் ஒருவர், தனது X தளத்தில்,

“மக்கள் வரிப்பணத்தில் திமுக விளம்பரம்!” என பதிவிட்டு இந்த ஆவின் அரசு விளம்பரச் செய்தியை பகிர்ந்துள்ளார்.






மற்றொரு சமூக ஊடகப் பக்கத்தில், “திமுக விளம்பர மாடல் அரசு” என இந்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.



உண்மைச் சரிப்பார்ப்பு :

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் பற்றி சமூக ஊடகங்களில் பரவும் இந்த தகவல்களை தெலுங்கு போஸ்ட் உண்மைச் சர்ப்பார்ப்பு குழு ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது. முதலில் உங்களுடன் ஸ்டாலின் என்ற முக்கிய வார்த்தைகளை கூகுள் தேடலில் தேடியப்போது, அதில் தமிழ்நாடு அரசின் புதிய நலத்திட்டம் தான் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் என்பதற்கான செய்திப்பதிவுகள் இருந்தன. இதுகுறித்து “தினத் தந்தி” நாளிதழில் வெளியிட்ட செய்திப்பதிவினை காண முடிந்தது.

அதன் விவரத்தினை இங்கே காண்லாம்:


மேலும் தமிழக அரசின் மக்கள் தொடர்ப்பு பிரிவு, TNDIPR சார்பில் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவினை காண முடிந்தது.

அதன் இணைப்பினை இங்கே காணலாம்:






மேலும் கூகுள் லென்ஸ் மூலம் தேடிய போது தமிழக அரசின் திட்டங்கள் பற்றி தவறாக கருத்து பரப்பியதையும் மக்களை குழப்பும் செயல்களை அரசியல் நோக்கத்துடன் சிலர் வதந்திகளை பரப்புவதை அறிய முடிந்தது. தொடந்து, இந்த திட்டத்தின் விவரங்களை தேடிய போது, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் தொடக்கமாக தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 196 இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, நவம்பர் 30-ந் தேதி வரை இந்த முகாம் நடைபெற இருக்கிறது என அரசு தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் முகாம் நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த விவரங்களை அறியும் வகையில் ஒரு இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. https://cmhelpline.tnega.org/ என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் இந்த திட்டத்தின் செயற்பாடுகளை அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஆய்வுச் செய்கையில், 'உங்களுடன் ஸ்டாலின்' , பொங்கள் வாழ்த்து, ரம்ஜான் வாழ்த்து போன்ற தமிழக அரசின் திட்டங்களும், வாழ்த்துச்செய்திகளும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டு அன்றாடம் மக்கள் காணும் வகையில் தகவல்கள் பரப்புவது ஒரு வழக்கமான செயல் தான் என்பதை அறிய முடிந்தது. தமிழக அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் பால் பாக்கெட்டு பைகளில், மக்கள் ஒன்று கூடும் பொது இடங்களில், பேருந்துகளில் இதுபோன்ற அரசு விளம்பரங்கள் இடம்பெறுவது அனைத்து அரசியல் கட்சிகளும் பின்பற்றும் ஒரு செய்தியை மக்களிடம் கொண்டுச் சேர்க்கும் யுக்தி தான்.

மேலும் அந்த ஆவின் விளம்பரத்தை நங்கு கவனித்தால், அதில்

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் என்று குறிப்பிட்டிருப்பதை பார்க்க முடியும்.



 

இந்த விளம்பரத்தில் திமுக அல்லது திமுக அரசு என்று குறிப்பிடப்படவில்லை. இதில் முகாம் நடைபெறும் தேதி ஜீலை 15 முதல் நவம்பர் 15 வரை என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது. இதிலிருந்து, இது தமிழக அரசு திட்டத்தின் செய்தி விளம்பரம் தான் என்றும் திமுக வின் கட்சி அல்லது அரசியல் விளம்பரம் இல்லை என்றும் தெளிவாக உறுதி ஆகிறது.

முடிவு : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் பற்றி ஆவின் பால்கவரில் அச்சிடப்பட்ட விளம்பரம் என்பது தமிழக அரசின் நலத்திட்ட முகாம் பற்றிய தகவல் மட்டுமே. அது திமுக வின் அரசியல் விளம்பரம் இல்லை என்றும் தெலுங்கு போஸ்ட் குழு தனது தகவலாய்வில் உறுதிச் செய்துள்ளது.

Claim :  மக்கள் வரிப்பணத்தில் ஆவின் பால்பாக்கெட்டுகளில் திமுக விளம்பரம் என பரவும் செய்தி
Claimed By :  Social media users
Fact Check :  Unknown
Tags:    

Similar News