மு.க.ஸ்டாலின் கவுன்சிலர் ஆகக்கூட தகுதி இல்லாதவர் என்று ஆ.ராசா பேசினாரா? நடந்தது என்ன??
சமூக வளைதளங்களில் சில நாட்களாக வெகுவாக பரப்பப்பட்ட காணொளி ஒன்றில் திமுக கட்சியினை சார்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராஜா அவர்கள், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரைக் குறிப்பிட்டு “வார்டு கவுன்சிலர் பதவிக்கு கூட தகுதி இல்லாதவர்” என்று கூறியதாக கருத்துப் பரவுகிறது.
மு.க.ஸ்டாலின் கவுன்சிலர் ஆகக்கூட தகுதி இல்லாதவர் என்று ஆ.ராசா பேசினாரா? நடந்தது என்ன??
Claim: ‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவுன்சிலர் ஆகக்கூட தகுதியானவர் அல்ல’ என்று ஆ.ராஜா அவர்களே கூறியுள்ளார்
Fact : ஆ.ராஜாவின் பேச்சு என்று பரப்படும் காணொளி பழையது. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது ஆ.ராஜா கூறிய கருத்துகள் தான் வைரல் காணொளியில் பதிவாகியுள்ளது.
FactCheck : வைரலான ஆ.ராஜாவின் காணொளி முழுமையான ஒன்றல்ல. அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு திருத்தி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவு மக்களை தவறாக வழிநடத்தக்கூடியது.
சமூக வளைதளங்களில் சில நாட்களாக வெகுவாக பரப்பப்பட்ட காணொளி ஒன்றில் திமுக கட்சியினை சார்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராஜா அவர்கள், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரைக் குறிப்பிட்டு “வார்டு கவுன்சிலர் பதவிக்கு கூட தகுதி இல்லாதவர்” என்று கூறியதாக கருத்துப் பரவுகிறது. அதனை கண்ட பலரும் அந்த காணொளியினை பகிர்ந்து, “ஆ.ராஜாவே ஸ்டாலினை அவமதித்து பேசியுள்ளார்” என பதிவேற்றியுள்ளார்கள்.
“முதல்வர் மு.க.ஸ்டாலின் வார்டு கவுன்சிலருக்கு கூட தகுதி அற்றவர் என்று ஆ.ராசா கூறியுள்ளார்” என்று காணொளி சமூக ஊடகமான X (முன் Twitter) உள்ளிட்ட மற்ற வலைத் தளங்களிலும் மிக வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.
இந்த தகவல்கள் அடங்கிய பதிவின் விவரத்தினை இங்கு அறியலாம். ஒரு சமூக ஊடக பயனாளர் தனது பக்கத்தில் ஆ.ராஜா தமிழக முதல்வரை திட்டியதாகவும், அக்கருத்து தற்போது நங்கு பொருந்துவதாகவும் கேலியாக பகிர்ந்துள்ளார்.
Source 1 : https://x.com/Karthikravivarm/status/౧౮౭౮౦౨౭౯౦౬౭౪౫౫౬౯౪౪౭
அதேபோல மற்றொரு சமூக பக்கத்தில், “ 2G ராசா-க்கு ஸ்டாலின் மேல என்ன வன்மமோ தெரியல, இப்படி காறி துப்பி இருக்கார்” என்று ஆ.ராஜா பேசிய காணொளியுடன் பகிர்ந்துள்ளார்.
Archive Link : ps://x.com/Saffron_Anil_/status/౧౯౭౮౦౬౮౧౮౧౩౦౩౪౦౬౯౬౪
மற்றொருவர், ஆ.ராஜா திமுகவின் தலைமையை நோக்கிக் கேள்வி எழுப்பியதாக குறிப்பிட்டுள்ளார். அதன் முழுவிவரத்தினையும் கீழுள்ள இணைப்பில் காணலாம்.
Source 3 : https://x.com/V_F_C_Madesh/status/௧௯௭௯௩௮௩௮௭௭௫௧௩௯௦௪௬௧௧
உண்மைச் சரிப்பார்ப்பு (Fact Check):
ஆ.ராஜா பேச்சு என்று வைரலாகும் பரவிய காணொளி மற்றும் அதைப்பற்றிய தகவல்களை தெலுங்குபோஸ்ட் உண்மைச் சரிப்பார்ப்பு குழு ஆய்வுக்கு உட்படுத்தியது. முதலில் பதிவிலிலுள்ள காணொளியில் இடம்பெற்ற உரை, பேச்சாளர், இடம், நேரம் போன்ற அடிப்படையான விவரங்களை ஆராய்ந்து பார்த்தோம். அதன் பிறகு அந்த உரையில் வந்த பேச்சின் முழு உரையையும், சமூக ஊடக பதிவில் குறிப்பிட்ட அந்த சந்தர்ப்பத்தில் தான் ஆ.ராஜா பேசினாரா என்பதையும் ஆராய்ந்தோம். குறிப்பாக முதலமைச்சரை பற்றி அந்த வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார்களா ? என்பதன் அடிப்படையிலும் ஆய்வு செய்யப்பட்டது.
அந்த காணொளியில் REDPIX என்னும் வாட்டர்மார்க் குறியீடு இருப்பதை கவனித்தோம். REDPIX என்பது ஒரு யூ டியுப் சேனல். அந்த சமூக தளத்தில் தேடிய போது, “A raja speech about edappadi palanisamy and modi” என்று தலைப்புடன் பிப்ரவரி 15, 2021 அன்று பதிவேற்றப்பட்டிருந்த இந்த காணோளியின் முழுமையான தொகுப்பினை பதிவிட்டிருப்பதை அறிய முடிந்தது. அதில் பேசிய ஆ.ராஜா, வார்டு கவுன்சிலருக்கு கூட தகுதி இல்லாதவர் என்று அச்சமயத்தில் தமிழக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியினை தான் அவர் காட்டமாக விமர்சித்திருப்பதையும் காண முடிந்தது.
ஆ.ராஜாவின் உரையினை முழுமையாக இந்த இணைப்பில் காணலாம்
இதன்மூலம் இது ஒரு பழைய காணொளி என்பதும், மேலும் அப்போது திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற காலகட்டம் என்பதனையும் அறிய முடிந்தது. அச்சமயத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்களை கடுமையாக ஆ.ராஜா விமர்சித்துள்ளார் என்பது உறுதியாக தெரிகிறது. தற்போது பரவும் காணொளி பழைய பதிவிலிருந்து எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. எனவே மாற்றம் செய்யப்பட்ட காணொளி மூலமாக திரிக்கப்பட்ட தகவல்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ளது. இந்த தகவல் அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்பட்டுள்ளது. பழைய வீடியோக்களை இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி திரிக்கப்பட்ட செய்திகளுடன் பரப்புவது மக்களிடையே தேவையற்ற குழப்பத்தை உருவாக்குகிறது. எனவே குறிப்பிட்ட சில நிமிட உரையை மட்டும் பார்த்து பகிர்வது தவறான புரிதலை அளிக்கலாம். இதன்மூலம் திமுக கட்சியினை சார்ந்த ஆ.ராஜா தன் கட்சிக்கும் எதிராகவும் தமிழக முதல்வருக்கு எதிராகவும் எந்தவித அவதூறான கருத்தினையும் தெரிவிக்கவில்லை என்பது உண்மை சரிப்பார்ப்பு ஆய்வின் மூலம் உறுதிச் செய்யப்படுகிறது.
முடிவு :
தெலுங்குபோஸ்ட் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவாக, “ஆ.ராஜா தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை அவதூறாக பேசினார்” என்ற கூற்று உண்மை அல்ல. மேலும் வைரலான காணொளி திருத்தப்பட்ட (altered) ஒன்றாகும். அது முழுமையானதும் இல்லை; அது நம்பகத் தன்மை உடையது அல்ல. இதனை வாசகர்கள் மற்றும் மக்கள் உறுதி செய்யாமல் இதுபோன்ற பதிவுகளை பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். போலி வதந்திகளை புரக்கணிக்க வேண்டும்.