முதியவரை உயிரை பறித்த மாடா.. ? திருப்பத்தூரில் நடந்தது என்ன!
மாடு பொதுமக்களை தாக்கிய சம்பவம் தமிழ்நாட்டில் திருப்பத்தூரில் நடக்கவில்லை. இது மகராஷ்டிரா கள்வான் பகுதியில் நடந்த விபத்தாகும்
Factcheck: முதியவரை மாடு தாக்கும் காணொளி தவறாக பகிரப்படுகிறது. இது ஒரு திரிக்கப்பட்ட போலிச் செய்தியாகும்.
தமிழகத்தில் தெருநாய், ஆடு மற்றும் மாடு போன்ற பிராணிகளால் சாலையில் விபத்துகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், சமூக ஊடகத்தில் பரவிய காணொளி காட்சிக் பார்ப்பவரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் சாலையின் நடுவே மாடு ஒன்று, அந்தப் பக்கமாகச் சென்ற முதியவர் ஒருவரை தாக்கிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. அதில் இந்நிகழ்வு திருப்பத்தூரில் நடந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1:38 நிமிடங்கள் இருக்கும் அந்த காணொளியில் முதியவரை மாடு தாக்கும், அவரை காப்பாற்ற இயலாமல் சுற்றியிருப்போர் அச்சப்படும் துயரச் சம்பவம் தமிழ்நாட்டில் உள்ள திருப்பத்தூரில் நடந்ததாக வலை தளங்களில் பரவுகிறது.
சமூக ஊடகப்பக்கங்களில் இக்காட்சி குறித்தப் பதிவில்
“தங்களுடய மாடுகளை இப்படி தெருவுல சுற்ற விடுறோமேன்னு கொஞ்சம் கூட புத்தி இல்லாத மனிதர்கள். தனி மனித ஒழுக்கம் இல்லாத சமுகம் உருப்படவே உருப்புடாது” என மாடு வளப்போரை கடுமையாக விமர்ச்சித்து சிலர் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்,
மற்றொரு X தளப்பக்கத்தில் ஒரு பயனாளர் இதே காணொளியினை பகிர்ந்து பசு மாடு தொல்லையால் மக்கள் அவதிப்படுகின்றனர் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.
உண்மைச் சரிப்பார்ப்பு:
தெலுங்கு போஸ்ட் உண்மை சரிப்பார்ப்பு குழு இந்த வைரல் பதிவினை தகலாய்வு செய்தது. இந்த காட்சியில் இடம்பெற்ற சம்பவத்தை கீ பிரேம்களாக பிரித்து கூகுள் லென்ஸ் மூலம் தேடினோம். அதில் இந்த சம்பவம் தமிழகத்திலுள்ள திருப்பத்தூரில் நடந்தது அல்ல. மகராஸ்டிராவில் நடந்தது என செய்தி வெளியீடுகளை பார்க்க முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் ஜுன் மாதம் 24,2025 அன்று “The Free Press Journal” வெளியிட்ட செய்தியில் மிகத் தெளிவாக இச்சம்பவம் மகராஷ்டிரா மாநிலத்தில் நடந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கூகுள் தேடலில் Times of India தனது ஊடகப்பக்கத்தில் ஜூன் மாதம் 25 ஆம் நாளன்று , மகராஷ்டிரா கள்வான் பகுதியில் சாலையோரத்தில் மாடு தாக்கியதில் 85 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இறந்த நபர் கல்வானைச் சேர்ந்த பால்சந்திர மல்புரே என அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என்னும் செய்தியினை வெளியிட்டுள்ளது.
இந்தச் செய்திகள் மூலம் இது தமிழ்நாட்டில் திருப்பத்தூர் பகுதியில் நடந்த சம்பவம் இல்லை என்பதனை அறிய முடிகிறது. மகாராஷ்டிராவில் உள்ள கல்வானில் பால்சந்திர மல்புரே என்ற 85 வயது நபரை மாடு முட்டியபோது எடுக்கப்பட்ட காணொளிப் பதிவினை பலரும் தவறாகப் பரப்பி தமிழ்நாட்டில் நடைப்பெற்றதாக ஐயத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.
இதற்கிடையில் திருப்பத்தூரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 15 பேர் காயமடைந்தடைந்தனர். இச்சம்பவத்தில் மணல் லாரி அரசுப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதில் 15க்கும் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பேருந்து விபத்து குறித்த NewsTamil24*7 யூ டியுப் பக்கத்தில் காணலாம்.
இந்த சாலை விபத்தினை தொடர்ந்து திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே மாடுகளால் தொல்லை என்ற திரிக்கப்பட்ட செய்தியும் பொதுமக்களிடையே பாதுகாப்புமின்மையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மக்களுக்கு அரசுப்பேருந்து, பொது போக்குவரத்து பயணங்கள் மீதான அச்சத்தை ஏற்படுத்தும் இந்தச் செய்தி உள்நோக்கத்துடன் பகிரப்பட்ட ஒன்றாகும்.
தொடர்ந்து பல்வேறு விபத்துக்கள் குறித்த பழைய காணொளிகள் தற்போது நடைப்பெற்றது போல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சமூக ஊடகப் பயனாளர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் திருப்பத்தூர் விபத்து பற்றி காணொளி காட்சி பகிர்ந்துள்ளார். அப்பதிவின் இணைப்பினை கீழே காணலாம்
ஆனால் இந்த விபத்து காணொளி தெலுங்கு போஸ்ட் குழு ஆய்வு செய்தப்போது, இதுபோன்ற எந்த சம்பவமும் வேறு எந்த ஊடகத்திலும் செய்தியாக வெளிவரவில்லை என்பதனை உறுதிச் செய்ய முடிந்தது. இவை முற்றிலுமாக திரிக்கப்பட்ட போலிச் செய்தியாகும்.
முடிவு: தெலுங்கு போஸ்ட் குழு ஆய்வின் முடிவில் இந்த காணொளி மகாராஷ்டிராவில் உள்ள கல்வானில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. மேலும் இதுபோன்ற சாலை விபத்தினை மையப்படுத்திய பல பழைய மற்றும் திரிக்கப்பட்ட செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதையும் அறிய முடிந்தது. பொது அமைதியினை சீர்குலைக்கும் இதுபோன்றச் செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்து பகிரவேண்டும்.