மனைவியை இழந்த, திருமணமாகாத ஆண்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை!- இது உண்மை தானா?

மனைவியை இழந்த, திருமணமாகாத, ஆதரவற்ற ஆண்களுக்கு மாதம் ₹5,000 நிதியுதவி திட்டம்

Update: 2025-05-22 17:22 GMT


Fact check : மத்திய அரசும் மற்றும் தமிழக அரசும் இதுபோன்ற ஆதரவற்ற ஆண்களுக்கு நிதியுதவி திட்டத்தை முன்னெடுக்கவில்லை. இது முற்றிலும் தவறான தகவலாகும்


மத்திய அரசு சமூக நல மேம்பாடு திட்டத்தின் கீழ் "மனைவியை இழந்த, திருமணமாகாத, 40 வயதுக்கு மேலான ஆண்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது" என்று கூறுகிறது. மேலும் இந்தத் தொகை தமிழ்நாடு சமூக நலவாரியத்தின் State Social Welfare Board மூலம் வழங்கப்படுவதாகவும், அந்த அமைப்பின் "Widowed Men" திட்டத்தில் இது இடம்பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த திட்டம் பற்றிய பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.

பலர் இந்த தகவலை உண்மை என்று நம்பி சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்றும் கூட செய்திகளை பகிர்கின்றனர்.

ஆண்கள் உதவித்தொகை பற்றிய சமூக ஊடகப் பதிவுகளின் விவரம் இங்கே காணலாம்,

முகநூல் பயனாளாரின் பதிவு ஒன்றில், “மனைவியை இழந்த, திருமணமாகாத, ஆதரவற்ற ஆண்களுக்கு மாதம் ₹5,000 பென்ஷன் திட்டம் உள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள 40 வயது நிரம்பியவர்கள் (மாநிலத்துக்கு மாநிலம் வயதுவரம்பு மாறும்) விண்ணப்பிக்கலாம். ஆதார், வருமான சான்று, ரேஷன் கார்டு, மனைவியின் இறப்புச் சான்று கட்டாயம் தேவை. State Social Welfare வெப்சைட் சென்று, அங்கு கொடுத்துள்ள Widowed Men திட்டத்தில் இதற்கு விண்ணப்பிக்கலாம்.” என அவர் பகிர்ந்துள்ளார்.


Full View



இதே செய்தியினை பயனாளர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவின் விவரம் இங்கே



இத்தகவல்கள் அடங்கிய செய்தியும் 1News Nation எனும் ஊடகத்திலும் வெளியிட்டுள்ளனர். அந்த விவரங்களை இந்த இணைப்பில் காணலாம்



 

உண்மை சரிப்பார்ப்பு :

தெலுங்குபோஸ்ட் உண்மைச் சரிப்பார்ப்பு குழு இந்த வைரல் செய்தியின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தது. முதலில் கூகுள் தேடலில் முக்கிய வார்த்தைகளை கொண்டு இதுப்பற்றி அரசு ஏதும் தகவல் வெளியிட்டுள்ளதா என்று ஆராய்ந்து பார்த்தோம். அப்போது ஹரியானா மாநிலத்தில் மட்டுமே ஆதரவற்ற , 45 வயதுக்கு மேல் தனித்து வாழும் ஆண்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் உள்ளது என்பதனை மட்டுமே அறிய முடிந்தது. இச்செய்தியினை எந்த தேசிய மற்றும் மாநில செய்தி ஊடங்கங்களும் பதிவிடவில்லை. அதேபோல் தற்போதைய நிலையில் தமிழகத்தில் மனைவியை இழந்த அல்லது திருமணமாகாத ஆண்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 வழங்கப்படும் என்ற நிதி உதவி பற்றி அரசு எவ்வித அறிவிப்பும் கிடைக்கவில்லை.

மேலும், தமிழகத்தில் தற்போது மனைவியை இழந்த ஆண்களுக்கு எவ்வித உதவி தொகையும் வழங்கப்படுவது இல்லை. சமூக நல உதவி திட்ட அறிமுகம் பற்றி அரசு அதிகாரிகளோ அல்லது அமைச்சர்கள் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. அவ்வாறான காணொளி பதிவுகள் எதுவும் கூகுள் தேடலில் கிடைக்கவில்லை. அரசானை எதுவும் இதுவரையிலும் பிறப்பிக்கப்படவில்லை. அதிலும் குறிப்பாக மத்திய அரசின் சமூக நலத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் இந்த நிதியுதவிக் குறித்து எந்த தகவலும் இல்லை.





இத்தகைய தவறான தகவல்கள், பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில், பழைய அல்லது பிற மாநிலங்களில் நடைமுறையில் உள்ள திட்டங்களை தமிழக அரசின் அல்லது மத்திய அரசின் முன்னெடுப்பு என போலிச் செய்திகள் பகிரப்படுகின்றன, இது பலருக்கும் தவறான புரிதலை ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றன. இதனால் சிலர் தங்களுக்கு உதவிக் கிடைக்குமா என்று அரசு அலுவலகங்களில் தேடவும் முயற்சிக்கவும் விழைகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்படும் போலித் தகவல்களால் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க, அரசுத் துறைகள் பற்றிய தகவல்களையும், மற்றும் அரசு நலத் திட்டங்களையும் குறித்து அறிந்துக் கொள்ள அரசாங்க இணையத் தளங்களை மட்டுமே நாடுவதே சரியான வழியாகும். அதனைத் தவிர்த்து வேறு தகவல்களை நம்புவது, இணையச் சேவையை பயன்படுத்துவதினால் நமது நேரத்தினையும் பணத்தினையும் இழக்க நேரிடலாம்

முடிவு : மத்திய அரசு அல்லது தமிழக மாநில அரசு, சமூக நலத் திட்டத்தின் கீழ் மனைவியை இழந்த அல்லது திருமணமாகாத ஆண்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படும் என கூறப்படும் தகவல் தவறானது. இது முற்றிலுமாக மக்களை தவறாக வழிநடத்தும் திரிக்கப்பட்ட தகவலாகும் என்பதனை தெலுங்குப் போஸ்ட் குழு தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது.

Claim :  மனைவியை இழந்த, திருமணமாகாத, ஆதரவற்ற ஆண்களுக்கு மாதம் ₹5,000 நிதியுதவி திட்டம்
Claimed By :  Social media users
Fact Check :  Unknown
Tags:    

Similar News