3 இந்திய விமானப்படை விமானங்கள் 2 மணி நேரத்திற்குள் வெடித்து சிதறியதா?

இரண்டு மணி நேரத்திற்குள் 3 இந்திய விமானப் படை விமானங்கள் விபத்தை சந்தித்ததாக பொய்யான தகவல் பரவி வருகிறது.

Update: 2025-11-20 03:28 GMT

சென்னையை அடுத்த தாம்பரத்தில் விமானப் படை பயிற்சி தளம் செயல்பட்டு வருகிறது. நவம்பர் 15ஆம் தேதி விமானப் படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட விமானம், திருப்போரூர் அருகே வானில் பறந்து கொண் டிருந்தபோது, தொழில் நுட்ப கோளாறால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனையடுத்து, நெம்மேலி புறவழிச் சாலையில் அருகே உள்ள உப்பு தயாரிப்பு தொழிற்சாலையில் விழுந்து நொறுங்கியது. முன்னதாக விமானி பாராசூட் மூலமாக கீழே குதித்து உயிர் தப்பினார். இதற்கு முன்பாகவும் பயிற்சி விமானங்கள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கும் சம்பவங்களும் சில இடங்களில் நடந்துள்ளன.

பரவும் தகவல்

இந்த நிலையில் மின்னணு பிரச்னை காரணமாக இந்தியாவில் இரண்டு மணி நேரத்திற்குள் 3 இந்திய விமானப் படை விமானங்கள் வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் விமானத்தின் பாகங்கள் சிதறி விழுந்துக் கிடப்பதையும் நம்மால் காண முடிந்தது.

SyedDaniyal201 என்ற எஸ்க் பயனர், “கண்டுபிடிக்க முடியாத மின்னணு குறுக்கீடு காரணமாக இரண்டு மணி நேரத்திற்குள் 3 இந்திய விமானப்படை விமானங்கள் விபத்துக்குள்ளாகின” என்று குறிப்பிட்டு வைரல் புகைப்படத்தை ஷேர் செய்திருந்தார்.

மேலும் 3 விமானங்கள் விழுந்து நொறுங்கியதாகவே மேலும் சில சமூக ஊடகக் கணக்குகளில் புகைப்படம் பகிரப்பட்டு இருந்தது. இதனை உண்மை என்று நம்பி பலரும் தங்களது கணக்குகளில் பகிர்வதையும் காண முடிந்தது.



உண்மை சரிபார்ப்பு

வைரல் புகைப்படம் மற்றும் தகவலின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு ஆய்வு செய்தது. அதில் 3 விமானங்கள் விபத்துக்குள்ளாகவில்லை என்பதும், வைரல் புகைப்படமும் பழையது என்றும் தெரியவந்தது.

முதலில் வைரல் புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டதா என்பதை அறிய கூகுள் லென்ஸ் மூலம் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் வைரல் புகைப்படம் எகனாமிக்ஸ் டைம்ஸ் இணையதளத்தில் 2023ம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வெளியிடப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தோம். செய்தி அறிக்கையின்படி, “குவாலியரில் இருந்து புறப்பட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மூன்று போர் விமானங்களில் இரண்டு நடுவானில் விபத்துக்கு உள்ளானது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் 2023 ஜனவரி 28ஆம் தேதி நடந்ததை டெக்கான் ஹெரால்டு செய்தி வாயிலாகவும் உறுதிப்படுத்திக் கொண்டோம். அதிலும் வைரல் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.




ஆகவே வைரலாவது தற்போதைய புகைப்படம் அல்ல, 2023ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு கண்டுபிடித்தது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இந்தியாவில் எங்காவது விமானப் படையின் 3 விமானங்கள் விபத்துக்குள்ளானதா என கூகுளில் கீ வேர்டுகள் துணையுடன் சர்ச் செய்தோம். அதில் தாம்பரம் விமான விபத்து செய்திகள் மட்டுமே நமக்கு கிடைத்தன. 


 ஃப்౪ர்ச் இணையதளத்தில் நவம்பர் 15ம் தேதி வெளியிட்ட செய்தியில், “சென்னை தாம்பரத்தில் இந்திய விமானப்படையின் பறக்கும் பயிற்றுனர்கள் பள்ளியின் பிலாட்டஸ் PC-7 Mk-II பயிற்சி விமானம் திருப்போரூர் அருகே விபத்துக்குள்ளானது. விமானிக்கு நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பினார்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனை இந்திய விமானப் படை சமூக வலைதளப் பக்கம், என்டிடிவி, இந்துஸ்தான் டைம்ஸ் செய்திகளின் வாயிலாகவும் உறுதிப்படுத்தினோம்.

இந்த ஆதாரங்கள் வாயிலாக சமீபத்தில் தாம்பரம் அருகே விமானப் படை பயிற்சி விமானம் ஒன்று விபத்தை சந்தித்து தெரியவந்தது. ஆனால், 2 மணி நேரங்களில் 3 விமானங்கள் விபத்துக்குள்ளானதாக எந்த செய்திகளும் இல்லை.



மேலும் நம்முடைய தேடலில் வைரலாகும் தகவல் பொய்யானது என மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பு சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு இருந்தது. அதில், “பாகிஸ்தான் சார்பு சமூக வலைதளங்கள் இவ்வாறான தகவல்களை பரப்புகின்றன. இந்தக் கூற்று பொய்யானது . சென்னை தாம்பரம் அருகே இன்று வழக்கமான பயிற்சிப் பணியின் போது இந்திய விமானப்படையின் PC-7 Mk II பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தியுள்ளது. விமானி பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார், மேலும் பொதுமக்களின் சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை” என்று விளக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் 3 விமானப் படை விமானங்கள் 2 மணி நேரத்திற்குள் விபத்தை சந்தித்ததாக பரவும் தகவல் பொய்யானது. தாம்பரம் அருகே பயிற்சி விமானம் விபத்தை சந்தித்தாலும் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை. பழைய விமான விபத்து புகைப்படத்தை எடுத்து, சமீபத்தில் நடந்த சம்பவம் போல தவறாக பரப்பி வருகிறார்கள். ஆகவே, தகவல்களை வெளியிடும்போது உண்மைத் தன்மையை சரிபார்த்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு வாசகர்களை கேட்டுக்கொள்கிறது.

Claim :  விமானப் படையின் 3 விமானங்கள் 2 மணி நேரத்திற்குள் வெடித்துச் சிதறியதாக பரவும் தகவல்
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News