'இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானத்தின் நிலை' எனப் பரவிய வதந்தி!
இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானம் சுட்டுத் தாக்கப்பட்டதாகப் பகிர்ப்படும் காணொளி தவறானது. அது ஒரு வீடியோ கேம் காணொளி ஆகும்

Claim :
இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியக் காட்சிFact :
பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகப் பரவும் காட்சி, ஒரு வீடியோ கேம் காணொளியில் பதியப்பட்டப் காட்சியாகும்.
இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானம் சுட்டுத் தாக்கப்பட்டதாகப் பகிர்ப்படும் காணொளி தவறானது. அது ஒரு வீடியோ கேம் காணொளி ஆகும்
ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் நாள் அன்று பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய பாதுகாப்பு படைகள் பல்வேறு பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. அந்நிகழ்வினை தொடர்ந்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற இராணுவ நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் - ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றிக்கு சொந்தமான 9 பயங்கரவாத மறைவிடங்களை இந்திய ராணுவம் தாக்கியது.
இந்நிலையில், இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டதாக காட்சியமைக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பலராலும் வெகுவாகப் பரவி வருகிறது. இதுபோன்று போர் மன நிலையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் பல காணொளிகளையும் போலிச் செய்திகளையும் சமூக வலைதளங்களில் காண முடிகிறது.
குறிப்பாக முகநூல், X தளத்திலும் மற்றும் இன்ஸ்டா பக்கங்களிலும் சிலர், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் கீழ் இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானத்தை பொசுக்கி விட்டதாகப் பதிவிட்டிருந்தனர்.
ஒரு பயனாளர் தனது முகநூல் பக்கத்தில்,
இதுபோன்ற பதிவுகள் இரு நாடுகளிடையே போர் மூண்டதாக அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்டு வருகின்றன. எனவே போலிச் செய்திகளை கண்டறியும் நோக்கத்தில் தெலுங்குப்போஸ்ட் உண்மை சரிபார்ப்பு குழு இத்தகைய தகவல்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது.
உண்மைச் சரிபார்ப்பு :
தெலுங்குப்போஸ்ட் உண்மை சரிபார்ப்பு குழு சார்பில் இந்த காணொளியினை ஆய்வுச் செய்தது. அந்த காணொளியினை கீபிரேம்களை புகைப்படங்களாக் ககூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் மூலம் தேடிப் பார்த்ததில், இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானத்தை பொசுக்கி தள்ளிய பொழுது என்று குறிப்பிட்டு பரவும் காணொளி பல்வேறு நாடுகளுடைய போர் காட்சியாக சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு இருப்பதை காண முடிந்தது. அதனால் இத்தகவல் போலியானது என்பதை அறிய முடிந்தது.
அக்காணொளியின் மூலத்தினை தேடிய போது, “TBG Plays” என்ற முகநூல் பக்கத்தில், பரவி வரும் இதே காணொளி “GTA 5 வீடியோ கேமின் காட்சி“ என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் “TBG Plays” ன் முகநூல் பக்கத்தில் இதுப்போன்று பல காணொளிகள் பதிவு செய்யப்பட்டிருந்ததையும் பகிரப் பட்டிருப்பதையும் காண முடிகிறது.
இந்த விவரங்களை விளக்கும் தரவுப்படம் இங்கே
மேலும் முழுவிவரங்களுக்கு இந்த இணைப்பில் பார்க்கலாம்
இதனால், இந்த வீடியோ உண்மையான ராணுவ தாக்குதல் அல்ல, விளையாட்டு (வீடியோ கேம்) காட்சியை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தவறான தகவல் (Misleading Content) என்பது உறுதி செய்யப்படுகிறது. மேலும் இதுபோன்ற காட்சிப் பதிவுகள் பொதுமக்களின் உணர்வுகளை தூண்டும் நோக்கில் உருவாக்கப்படுகின்றன. அதனால் உண்மையிலேயே பொது இடங்களில், குடியிருப்புகளில் தாக்குதல் நடந்தது என நம்புவதற்கான சூழ்நிலையை சமூகத்தில் உருவாக்குகிறது.
முடிவு:
“பாகிஸ்தான் விமானம் இந்திய எல்லைக்குள் புகுந்து, இந்திய ராணுவம் அதை தாக்கியது” எனக் கூறும் காணொளி தகவல் தவறானது. அது GTA 5 என்ற வீடியோ கேமில் உருவாக்கப்பட்ட உண்மை இல்லாத வெறும் விளையாட்டு காட்சி. இதனை உண்மைச் சம்பவமாக பலரும் சமூக ஊடகங்களில் பகிர்வது தவறான தகவல்களை பரப்பும் செயல் ஆகும்.
எனவே பொதுமக்கள் இதுபோன்ற செய்திகளை பகிரும் முன் அவற்றைத் தகுந்த ஆதாரங்கள் மூலம் சரிபார்ப்பது மிக முக்கியம். உண்மையற்ற தகவல்களை குறிப்பாக இரு நாடுகளிடையே நடக்கும் சண்டைத் தொடர்பான பதிவுகளை, இதுபோன்ற அமைதியற்ற சூழ்நிலையில் பகிர்வது தேசியத்தின் மீதான பாதுகாப்பு உணர்வையும், பொது அமைதியையும் பாதிக்கும் செயலாக அமையும்.

