உண்மைச் சரிபார்ப்பு: சீமான் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை அவமதித்ததாக கூறப்படும் காணொளி தவறான தகவல்களுடன் பரவுகிறது
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை 'கீழ்சாதி' என்று அவமதித்தார் என கூறப்பட்டது. ஆனால் உண்மைச் சரிபார்ப்பு ‘ அவரது பேச்சு மாற்றம் செய்யப்பட்டு, ஒரு குறிப்பிட்ட கருத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது.

Claim :
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை ‘கீழ்சாதி’ என்று அவமதித்தார்Fact :
சீமான் பேச்சின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் வெகுவாக பரவுகிறது. அவை தவறானவை
நாம் தமிழர் கட்சி (NTK) தலைவர் செபாஸ்டியன் சைமன், பொதுவாக சீமான் என்று அழைக்கப்படும் இவர், திராவிடக் கொள்கையாளர் பெரியாரை குறித்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்ததற்காக கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளார். சமீபத்தில், பெரியாரியல் இயக்கங்களில் ஒன்றான தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அவரது வீட்டின் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நாம் தமிழர் கட்சி சீமான், பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) இணைந்து, தமிழ் தேசியம் என்னும் கொள்கையை, திராவிட அடையாளத்துக்கு எதிராக முன் வைத்து அரசியல் செய்கிறார் என்பது வலைதளத்தில் பேசப்படும் குற்றச்சாட்டு.
மேலும் தமிழகத்தில் சர்ச்சைகள் சூடுபிடித்துள்ள நிலையில், “மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் கீழ் சாதி” என சீமான் கூறியதாகத் வெளிவரும் கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவுகின்றன. News18 தமிழ்நாடு வெளியிட்ட நாம் தமிழர் கட்சித் நிறுவனர் சீமான் வீடியோவை X தளத்தில் பகிர்ந்த ஒருவர், “மாட்டுக்கறி தின்பவன் கீழ் சாதி. - பாஜக வளர்ப்பு நா*ய் சீமான்” என்று எழுதியுள்ளார்.
இந்த தகவல் ஆய்வின்போது, தெலுங்கு போஸ்ட் உண்மை கண்டறியும் குழு, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கொச்சையான கருத்துக்களை தெரிவித்தார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்று கண்டறியப் பட்டது.
கோமியம் விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பதில்,
“இந்த பைத்தியங்களிடம் நாடும், நாட்டு மக்களும் சிக்கி கொண்டோம்.. வேறு என்ன செய்ய முடியும்?.. மாட்டுப்பால் குடிப்பவன் இடைசாதி, மாட்டுக்கறி தின்பவன் கீழ்சாதி, மாட்டு மூத்திரம் குடிப்பவன் உயர்சாதி.. இதுதான் இந்த நாட்டின் கட்டமைப்பு.. இந்தியாவில்தான் நெய் எரிக்கப்படுகின்றது, பால் கீழே கொட்டப்படுகின்றது, மூத்திரம் குடிக்கப்படுகின்றது. இந்த நாட்டில் நீ சிக்கி கொண்டாய், நானும் சிக்கிக்கொண்டேன்”. என கூறியுள்ளார்.