“2026 ஏப்ரல் 9 தேதியில் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும்” என்ற வைரல் தகவல் உண்மையா?

Claim :
2026 ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும்Fact :
தேர்தல் ஆணையம் எந்த தேதியும் அறிவிக்கவில்லை
கடந்த சில நாட்களாக தேர்தல், கூட்டணி குறித்து பலச் செய்திகள் வந்துக்கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு அறிவுப்பதிவில், இந்திய தேர்தல் ஆணையம் தமிழக சட்டமன்றத் தேர்தலை 2026 ஏப்ரல் 9 தேதி அன்று ஒரே கட்டமாக நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தகவலை பலரும் பகிர்ந்தும் விமர்சித்தும் வருகின்றனர்.
வைரலாகும் தேர்தல் அறிவிப்பு குறித்த பதிவில்,
“இந்திய தேர்தல் ஆணையம் தமிழக சட்டமன்றத் தேர்தலை 2026 ஏப்ரல் 9 அன்று நடத்துகிறது; தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்; வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று”
என்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை ஒரு முகநூல் பயனாளார் தனது பக்கத்தில், “அறிவிச்சிட்டாங்கய்யா.. அறிவிச்சிட்டாங்க..” என்று ஆச்சரியாமாக பரப்பரப்பான தகவல் போல் வெளியிட்டுள்ளார்.
அதன் விவரங்களை இந்த இணைப்பில் காணலாம் : https://www.facebook.com/photo?fbid=879419164976154&set=a.114975704753841
மற்றுமொரு சமூக ஊடகப் பயனாளர் தனது பக்கத்தில், “ஏப்ரல் 9ஆம் தேதி தேர்தல் நடத்தி மே 4ஆம் தேதி வாக்கு என்ன வேண்டும் இவ்வளவு 24 நாட்கள் இடைவெளி எதற்கு ?” என்ற கேள்வியுடன் இந்த பதிவினை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவின் விவரங்களை இந்த இணைப்பின் ஊடாக காணலாம்,
Archive link : https://archive.is/gSRZj
உண்மைச் சரிபார்ப்பு:
Fact : ஏப்ரல் 9, 2026 அன்று தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும்” என்ற பதிவுகள் பொய்யானது. தேர்தல் ஆனையத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லாமல் சமூக வலைதளங்களில் பரவும் தவறான முன்கூட்டிய தகவல்
சமூக ஊடகத்தில் பலரும் விமர்சித்த இந்த பதிவு உண்மைத் தானா என்ற சந்தேகம் எழுந்தது. அதனை தெலுங்குபோஸ்ட் உண்மைச் சர்பார்ப்பு குழு ஆய்வு செய்தது.
முதலாவதாக, பரவலாக வெளியான இந்த தகவலை உறுதி செய்ய, உண்மைத் தன்மை அறிய தேர்தல் ஆணையத்தின் ( Election Commission of India) அதிகாரப்பூர்வ இணையதளம், செய்திக்குறிப்புகள் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களை கவனமாக ஆய்வு செய்தோம். அதில் 2026ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக எந்த தேதியும் அறிவிக்கப்பட்டதாக செய்தி வெளியீடு எதுவும் இல்லை. வழக்கமாக தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவிக்கும் போது பொதுவாக அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பு நடத்தி, முழுமையான தேர்தல் அட்டவணையை மக்கள் கவனத்திற்கு வெளியிடுவது வழக்கம். அத்தகைய தேர்தல் குறித்த அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இரண்டாவதாக, முக்கிய செய்தி ஊடகங்களில் அல்லது தினசரி செய்தித்தாளில் இந்த தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்று தெலுங்குபோஸ்ட் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டன. முக்கிய வார்த்தைகளை கொண்டு கூகுள் தேடல் மூலம் இணையத்தில் ஆராய்ந்தோம். ஆனால் எந்த ஊடகத்திலும் “ஏப்ரல் 9, 2026 தேர்தல்” என்ற தகவல் இதுவரையிலும் வெளிவரவில்லை. தேர்தல் போன்ற முக்கிய அரசியல் நிகழ்வுகளை முக்கிய ஊடகங்கள் நிச்சயமாக வெளியிடும். எனவே அந்த தகவல் முற்றிலுமாக ஆதாரம் இன்றி சித்தரிக்கப்பட்டது.
மூன்றவதாக, இணையத்தில் வைரலான பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் “Election Commission of India” அலுவலகமான நிர்வாசன் சதன் கட்டிடத்தின் பொதுவான ஒரு புகைப்படமாகும். இந்த படம் பழையது மற்றும் பல செய்திகளில் இதற்கு முன்பும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படத்திற்கும், குறிப்பிட்ட தேர்தல் தேதியுடன் தொடர்பு இல்லை. பொதுவான தேர்தல் ஆணைய புகைப்படத்தினை பயன்படுத்தி சமீபத்திய செய்தியினை போல வடிவமைக்கப்பட்டு இத்தகவல் சமூக ஊடகங்களில் வெகுவாக பரவி வருகிறது.
மேலும் தேர்தல் ஆணையம் ஒரு வழக்கமான பாதுகாப்பு முறைகளையும், விதிமுறைகளையும் பின்பற்றி, அவற்றைச் சரிப்பார்த்த பிறகு தான் தேர்தல் நடைபெறும் தேதிகளை அந்தந்த மாநிலங்களில் , உரிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிடும்.
எனவே, “2026 ஏப்ரல் 9 அன்று தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும்” என்ற வலைதளா தகவலுக்கு எந்த அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லை. இதனைபற்றி தேர்தல் ஆணையம் எந்த அறிவிப்பும் இதுவரையில் வெளியிடவில்லை. முக்கிய ஊடகங்களிலும் இந்த செய்தி இடம்பெறவில்லை. ஆகவே இந்த பதிவு தவறான மற்றும் உறுதிப்படுத்தப்படாத வதந்திச் செய்தி என தெலுங்குபோஸ்ட் குழு உறுதிச் செய்கிறது.
முடிவு : தேர்தல் போன்ற முக்கிய தகவல்களை சமூக வலைதளங்களில் பார்க்கும் போது உடனே நம்பாமல், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் உறுதி செய்வது அவசியம். தேர்தல் ஆணையத்தின் உறுதிசெய்யப்பட்ட செய்தி வெளியீடு அல்லது ஆணை பதிவேட்டின் அடிப்படையில் மட்டுமே இதுபோன்ற செய்திகளை அனுக வேண்டும் மற்றும் பகிர வேண்டும்.

